Skip to main content

நான் கனவு கண்ட பார்



புளிய மரம் நிழல் கொடுக்கக் காத்திருக்கு

புகை கலவாத் தென்றல் காற்று வீற்றிருக்கு

பூக்களெல்லாம் புன்னகித்துச் சிவந்திருக்கு

பூமியெங்கும் ஆனந்தம் மலர்ந்திருக்கு..


மாட்டுவண்டி பாதையெங்கும் படர்ந்திருக்கு

காட்டு வாசம் காற்றினிலே கலந்திருக்கு

வீட்டு வாசல் பாசத்தில் நிறைந்திருக்கு

பாட்டி கதை உள்ளத்தில் பதிந்திருக்கு..


ஏறு பூட்டி உழுத வயல் செழித்திருக்கு

கூறு போடத் தேவையில்லை நிலமிருக்கு

நூறு பேரு வந்தாலும் உணவிருக்கு

சோறு போடா நல்லதொரு மனமிருக்கு..


ஆடு, மாடு கோழியெல்லாம் வீட்டினிலே

காடு கொண்ட விலங்கெல்லாம் காட்டினிலே

மேடு பள்ளம் இல்லை என்றும் மனதினிலே

பாடு பட்டு உழைத்திடுவோம் பகலினிலே..


ஓசோனில் ஒட்டையிட யாருமில்லை

ஓடியாடிப் பாடிடவும் தடைகலில்லை

ஒட்டையோடு ஓலை வீடு திருடனில்லை

ஓய்வெடுக்க ஓலைப் பாய்போல் ஒன்றுமில்லை..


இயந்திரங்கள் சண்டையிடும் ஓசையில்லை

இனிமையான குயிலோசை பஞ்சமே இல்லை

இயற்கைக்கும் எங்களுக்கும் தூரமில்ல

இனிமையான வாழ்விது ஐயமில்ல..


லஞ்ச, ஊழல் அரசியல்கள் காணவில்லை

பஞ்சம், பசி பட்டினிகள் எங்குமில்லை

கஞ்சியோடு கருவாடு மறக்கவில்லை

மிஞ்ச சோறு வாசனையும் அலுக்கவில்லை..


கடன் கொடுக்கக் காத்திருப்போர் ஆயிரம் பேர்

இடம் இன்றி யாரும் இல்லை. எதுக்குப் போர்?

உடன் பிறப்பு உயிர்போல ஒற்றுமை பார்

உண்மையில், இதுதான் நான் கனவு கண்ட பார்..



Fathima Sifna

Reg No: EU/IS/2020/AC/561

Index No: CS10261

Comments

Popular posts from this blog

சிரித்தபோது எடுத்த புகைப்படம்

உள்க் காயங்கள், கண்களில் அனலாய்... வெளிக் காயங்கள், சிதைந்த சதைத் துண்டுகளாய்.. உடைந்து கிடந்தது இதயம்.. சிதைந்து ஒட்டவும் முடியாமல்.. உழைத்ததட்கு கரங்களைத் தவிர- வேறு, நிலையான சாட்சி இல்லை.. கலைத்துப் போனதற்குக் காட்டிக் கொடுக்கக், கண்ணீரும் சாட்சியாய் இல்லை.. நிலை குலைந்த உருவம்.. கலை குன்றிய வதனம்.. சிதரிவிட்டதென் வாழ்க்கை.. சிந்திக்க மறந்த சில தருணங்களால்.. சந்திக்க நேர்ந்த சில விசமிகளால்.. சந்தி சிரிக்கலான நிலை எனது.. சிரித்த நாட்களை சந்திக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் நினைவுக் காற்றுகளில், சத்தியமாய் ஈரப்பதனில்லை.. தூசு தட்டித் தேடுகிறேன்- எங்கே, நான் சிரித்தபோது எடுத்த புகைப்படம்.. 

நாளை எனக்காகவும் விடியலாம்..

சுமந்து வந்த கருப்பு விதிகளைக் கடப்பதற்கு முன், வாழ்க்கையின் எல்லையைக் கண்டு விடுவோம்... வாழ்க்கைப் பாதையின் முட் கம்பிகளில் பட்டு, கழன்று, சிதைந்து போன சதைத் துண்டுகள் நினைவில் கூட இல்லை. கடந்து வந்த பாதச் சுவடுகளுக்குள், பளிங்குகளும் முத்துக்களுமல்ல; சோகங்களும் இரத்தத் துளிகளும் கரையாய் படிந்து விட்டது... ஓய்வூதியம் கேட்கும் பாதணிகளுக்கு ஓட்டுப் போட்டதில், தேய்ந்து போனது இதயவரை.. காலையில் கதிரவனை விட கடன் காரனை எதிர் பார்த்த கசப்புகளுக்குப் பஞ்சமில்லை. ஓட்டைக் கூரையும் ஒட்டுத் துணியும் உழைக்கும் தொழிலாளிகளுக்கு உதாரணமாயிற்று.. சிரித்துப் பேசிய நாட்களைக் குறித்து வைத்திருந்திருப்பினும், பரி போன நாட்களை எண்ணிப் பெரு மூச்சு விட்டிருக்கலாம்.. வாழ்க்கை இன்னும் முடியவில்லை. ஓரிரண்டு மூச்சிலே இழுத்துக்கொண்டிருக்கிறது. நாளையும் ஒரு விடியல் உண்டு.. அது எனக்காகவும் விடியலாம்..